Friday, April 16, 2010

ஒரு கல்

மேகம் இடிப்பதும் வேண்டியதில்லை. மின்னலும் தேவையில்லை. வானில் பிறந்த ஒரு துளி மழையும் பூ தேகத்தில் உதிர்ந்தால் தானே மழை என்றாகிறது.

இதை உணர்ந்து சொல்ல ஒருவன் இருப்பானெனில் அது நிச்சையம் தேவராஜனாகத்தான் இருக்கும்.

காவேரிப்பட்டினம் ஒரு ஆசாகிய நகரம். காவேரி ஆறு கொண்டு, பசுமைத்தோட்டங்கள் கொண்டு திரவியம் கொண்ட 'Hi-Tech' விவசாயிகள் தலைமுறை தலைமுறையாய் முன்னேற்றிய நகரம். அந்த முன்னேற்றத்தில் சிறு சிறு குடிசைகளும் கான்க்ரீட் வீடுகளை மாறியிருந்தன.